அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு
அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது. அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்.
கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். பின்னர் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று அழைக்கப்பட்டது. முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். பின்னர் முத்துக்குட்டி பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.
மாற்றியமைப்பு மற்றும் அவதாரம்
தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்ட முத்துக்குட்டியை, அவரது தாயார் வெயிலாள் திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழாவுக்குக் கொண்டு செல்கிறார். அங்கே கடலருகே சென்றதும் முத்துக்குட்டி கடலுக்குள் சென்றார். மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல் (1833 மார்ச் 3), வைகுண்டர் கடலிலிருந்து பூரண அவதாரமாக வெளிப்படுகிறார். தாம் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகக் கூறி, தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் அவதாரப் பதி (செந்தூர் பதி) என அழைக்கப்படுகிறது.
தவம்
தெட்சணம் எனப்படும் பூவண்டன் தோப்பை (தற்போதைய சுவாமிதோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். யுகத்தவசு, சாதிக்கான தவசு, மற்றும் பெண்களுக்கான தவசு என மூன்று நிலைகளில் இத்தவம் அமைந்தது. முதல் இரண்டு ஆண்டுகள் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பீடத்திலும் தவம் இருந்தார். பச்சரிசிப் பால் மட்டுமே அருந்தி குறைவாகப் பேசினார்.
தீய சக்திகளை ஒடுக்குதல் & சமூக சீர்திருத்தம்
சுவாமிதோப்பில் தவம் இருந்த காலத்தில் தீய சக்திகளையும் பேய்களையும் ஒடுக்கி அழித்தார். மலைவாழ் மக்களின் மந்திர தந்திர முறைகளை மக்களுக்கே நன்மையாக மாற்றி அமைத்தார். நாட்டுமக்கள் இவரது போதனைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
சமபந்தி மற்றும் அய்யாவின் போதனைகள்
வைகுண்டர் மக்களை சாதி வேறுபாடின்றி ஒரே முத்திரிக் கிணற்றில் குளிக்கப் போதித்தார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சமபந்தி உண்ணும் முறையைத் தோற்றுவித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் உருவானது. "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் ஒப்பற்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அருளினார்.
சிறைவாசம் மற்றும் வெற்றி
அய்யாவின் சமத்துவ எழுச்சியைக் கண்ட திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாள் அய்யாவைக் கைது செய்து சிங்காரத்தோப்பு சிறையில் அடைத்து பல கொடுமைகளுக்கு உட்படுத்தினான். அக்கொடுமைகளை தெய்வ சக்தியால் வென்று வெளிவந்த அய்யாவை மக்கள் வாகனம் மூலம் தெட்சணத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் 700 குடும்பங்களை துவையல் தவம் மேற்கொள்ள வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார்.
வைகுண்டம் போதல் மற்றும் சீடர்கள்
அய்யா வைகுண்டர் ஐந்து சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுள் அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் மூல நூலான அகிலத்திரட்டு அம்மானை அருளப்பட்டது. 1851-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வைகுண்டர் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக வணங்கப்படுகிறது.
- தர்ம சீடர்
- வீமன் சீடர்
- அர்ச்சுணன் சீடர்
- சகாதேவன் சீடர் (ஹரிகோபாலன்)
- நகுலன் சீடர்
Life History of Ayya Vaikundar
According to the holy scripture Akilathirattu Ammanai, Ayya Vaikundar is the supreme divine incarnation taken by Narayana (Ekam - the ultimate supreme reality) to eradicate the evils of Kali Yuga and usher in the golden era of Dharma Yuga. Ayyavazhi upholds absolute monotheism centered on the supreme Ekam incarnated as Vaikundar.
Born in 1809 CE in the humble village of Thamarakulam in Kanyakumari District to the pious couple Ponnu Nadar and Veyilal, the child was initially named Mudisoodum Perumal and later known as Muthukutty. Deeply devoted to spiritual contemplation from his youth, he led a simple agrarian life and married Thirumalammal of Pooviyur.
The Divine Incarnation at Thiruchendur
In his 24th year, Muthukutty was afflicted with severe illness. In accordance with a divine vision, his mother took him to Thiruchendur during the Masi festival in 1833. Upon entering the sacred sea, Muthukutty dissolved into the cosmic reality, and on the 20th day of the Tamil month of Masi (March 3, 1833), Lord Vaikundar emerged from the waves of the sea as the complete Manu avatar carrying the divine Vinchai (commandments of Narayana) to establish righteous order on earth.
Six Years of Severe Penance
Journeying southward to Poovandanthoppu (present-day Swamithoppu), Ayya Vaikundar undertook six unbroken years of austere penance in three distinct phases: two years in a six-foot pit, two years on the level ground, and two years on an elevated platform. Subsisting solely on rice-milk (pacharisi-pal) and water, he maintained noble silence and radiated spiritual grace.
Eradication of Evil & Abolition of Superstitions
During his spiritual penance, Ayya exorcised the malefic demonic forces holding sway over the minds of the oppressed, removed sorcery and fatalistic fears, and restored confidence and moral strength among the rural population.
Pioneering Social Equality & Samabandhi (Community Feast)
Ayya Vaikundar initiated one of India's earliest and most powerful anti-caste spiritual reform movements. He established the sacred Muthirikkinaru (communal well), commanding all people regardless of caste, creed, or gender to bathe together from the same source. He established the historic Samabandhi, where all devotees sat together on the floor to partake of meals in complete fraternity. His supreme humanitarian doctrine proclaimed: "Protecting the downtrodden is the essence of true Dharma" (தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்).
Imprisonment and Divine Triumph
Threatened by Ayya's growing spiritual equality movement, the monarch of Travancore (Swathi Thirunal) arrested Ayya and subjected him to terrible ordeals in Singarathoppu Prison. Ayya miraculously endured all trials unscathed, emerging victorious to the adoration of thousands who escorted him back to Swamithoppu.
Return to Vaikundam & The Five Disciples
Ayya guided 700 families through the intensive spiritual community discipline of Thuvayal Thavasu at Vagaipathi, and chose five devoted disciples who were celestial souls reincarnated to aid the divine mission. Through Disciple Hari Gopalan (Sahadevan Seedar), the sacred text of Akilathirattu Ammanai was penned in 1841. On June 3, 1851 (21st day of Vaikasi), Ayya Vaikundar attained Vaikundam, his physical shrine remaining the sanctum sanctorum of Swamithoppu Pathi.
- Dharma Seedar
- Bheeman Seedar
- Arjunan Seedar
- Sahadevan Seedar (Hari Gopalan)
- Nakulan Seedar